தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் - Sub register office

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரத்தில் ரூ. 94 லட்சத்தி 4 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

Chief Minister palanisamy inaugurated the sub Registrar office
Chief Minister palanisamy inaugurated the sub Registrar office

By

Published : Jul 31, 2020, 7:00 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் 2012 ஆம் ஆண்டிலிருந்து வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. நில ஆவணங்கள் பதிவு செய்தல், வில்லங்கச் சான்று வழங்குதல், திருமணப் பதிவு போன்ற பணிகளுக்காக சார்பதிவாளர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சார்பதிவாளர் அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதோடு பதிவு ஆவணங்களை பராமரிப்பதற்கும், பணியாளர்கள் பணியாற்றுவதற்கு போதிய இட வசதி இன்றி இருந்து வந்தது.

இதனையடுத்து சுங்குவார்சத்திரம் மொளச்சூர் பகுதியில் 3,250 சதுர அடியில் இரண்டு தளங்களுடன் புதிய சார்பதிவாளர் அலுவலகம் கட்ட தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. கட்டுமான பணிகள் தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ள இந்த புதிய அலுவலகத்தில் சார் பதிவாளர் அறை, காத்திருப்போர் அறை, கணினி அறை, பதிவு அறை பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட எண்ணற்ற வசதிகள் 94 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது . இதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

Chief Minister palanisamy inaugurated the sub Registrar office

ABOUT THE AUTHOR

...view details