தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் - உற்சாக வரவேற்பு! - Chess

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காண ஒலிம்பிக் ஜோதி இன்று (ஜுலை 25) கோவை கொண்டுவரப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் கோவையில் துவங்கியது
செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் கோவையில் துவங்கியது

By

Published : Jul 25, 2022, 12:21 PM IST

கோயம்புத்தூர்: 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் 28ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் ஒலிம்பிக் ஜோதி இன்று கோவை கொண்டுவரப்பட்டது. கொடிசியா வளாகத்தில் அமைச்சர்கள் அந்த ஜோதியினை செஸ் கிராண்ட் மாஸ்டர்களிடம் அளித்தனர்.

இந்நிலையில் அந்த ஜோதி, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுப்பிரமணியம் சிலை அருகில் இருந்து கொண்டு வரப்பட்டது. இதில் பல்வேறு மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜோதி ஓட்டமானது பந்தய சாலையில் தொடங்கி, அவிநாசி சாலை வழியாக கொடிசியா அரங்கு வரை சென்று நிறைவடைந்தது.

கோவையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்!

அதன்பின் இந்த ஜோதியை அமைச்சர்கள் செஸ் கிராண்ட் மாஸ்டர்களிடம் வழங்கினர். இந்த ஜோதி ஓட்டம் பாரம்பரிய கலைகள், இசை முழக்கங்கள் முழங்க எடுத்துச் செல்லப்பட்டது.

இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட்: ஒத்திகை போட்டியில் 1,414 வீரர்கள் பங்கேற்பு

ABOUT THE AUTHOR

...view details