கோயம்புத்தூர்:44-ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற 28 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒலிம்பியாட் ஜோதி இன்று (ஜூலை 25) கோவை கொண்டுவரப்பட்டு கொடிசியா வளாகத்தில் செஸ் கிராண்ட் மாஸ்டர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒலிம்பியாட் ஜோதியானது கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியிலிருந்து கொடிசியா வரை எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் வழிநெடுங்கிலும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் கொடிசியா அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, முத்துசாமி சாமிநாதன் ராமச்சந்திரன் ஆகியோர் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்டம் சார்பில் அந்த ஜோதியினை கிராண்ட் மாஸ்டர் சியாம் சுந்தரிடம் வழங்கினர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு சார்பில் பல்வேறு விளையாட்டு துறைகளில் சாதனை புரிந்த வீரர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. மேலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் அதிபிரைவு சதுரங்கப் போட்டி நடத்தப்பட்டது 10 மாணவர்களுடன் கிராண்ட் மாஸ்டர் சியாம் சுந்தர் சதுரங்கம் விளையாடினார். அதனைத் தொடர்ந்து செஸ் கேக் வெட்டப்பட்டது.