தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு: குழந்தைகளுக்கு நினைவு பரிசு! - செங்கல்பட்டு மாவட்டம்

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சார் ஆட்சியர் பரிசுகள் வழங்கி கௌரவப்படுத்தினார்.

சர்வதேச செஸ் போட்டி விழிப்புணர்வு
சர்வதேச செஸ் போட்டி விழிப்புணர்வு

By

Published : Jul 19, 2022, 8:51 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகிற 28 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10-ஆம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இதையடுத்து பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த செஸ் போட்டியில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

சர்வதேச செஸ் போட்டி விழிப்புணர்வு

இதில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு சார் ஆட்சியர் அலுவலகத்தில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் இனிப்புகள் வழங்கி கௌரவப்படுத்தினார்.

இதில் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடாசலம், தாசில்தார் தணிகைவேல் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா: பிரதமர் மோடிக்கு அழைப்பு

ABOUT THE AUTHOR

...view details