கோவை: பொள்ளாச்சியில் தேசிய அளவிலான 18 வயதிற்குள்பட்ட எம்பிஎல் 31ஆவது சதுரங்க சாம்பியன் போட்டி கடந்த 18ஆம் தேதி முதல் தொடங்கி நேற்று (ஏப்.23) நிறைவடைந்தது. இந்தப் போட்டியில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், காஷ்மீர், ஒரிசா ஆகிய மாநிலங்களிலிருந்து வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.எம்.மனிஷ் மற்றும் கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் விபாகர் வெங்கடகிருஷ்ணன் இடையே நடைபெற்ற போட்டியானது வெற்றி தோல்வி இல்லாமல் டிராவில் முடிந்தது.
தேசிய அளவிலான சதுரங்க சாம்பியன் போட்டி இது குறித்து விபாகர் வெங்கடகிருஷ்ணன் கூறுகையில், 'நான் சதுரங்கப் போட்டியை ஏழு வயது முதல் கம்ப்யூட்டரில் விளையாடி வந்தேன். பின் பயிற்சியாளர்கள் கொண்டு நன்றாக விளையாடி தேர்ச்சி பெற்றேன்.
தற்போது உள்ள இளைஞர்கள் மொபைல் போனில் நேரத்தை செலவிடுகிறார்கள். ஆனால், எனக்கு சதுரங்கப் போட்டி விளையாடுவதால் மனசு கட்டுக்குள் உள்ளது. வருங்கால இளைஞர்கள் சதுரங்கப் போட்டியில் விளையாட கற்றுக்கொள்ள வேண்டும். இனி வரும் 5 வருடங்களில் உலக அளவில் சதுரங்கப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறுவேன்' எனக் கூறினார்.
சதுரங்க போட்டியில் பரிசு பெற்ற வீரர்-வீராங்கனைகள் முன்னதாக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம் காசோலை மற்றும் கோப்பைகளை வழங்கினார். இதில், ஆல் இந்தியா செஸ் பெடரேஷன் (All India Chess Federation) செயலாளர் பாரத் சிங் சவுகான், தமிழ்நாடு செஸ் அசோசியன் (Tamil Nadu Chess Association) செயலாளர் ஸ்ரீ பாலசாமி, கோயம்புத்தூர் மாவட்ட செஸ் செயலாளர் ஜெயபால், கல்லூரி தாளாளர் ஹரிஹரசுதன், கல்லூரி முதல்வர் ரத்தினவேலு, கல்லூரி செயலர் ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த வீரர் CM ஷோகம் கம்மோட்ரா முதல் பரிசை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’இந்தியா தங்கம் வென்றதில் எனக்கும் பங்கு இருப்பது மகிழ்ச்சி’ - செஸ் வீரர் பிரக்ஞானந்தா