தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அவரவர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளை சென்று பார்வையிட்டு வந்தனர். இதனால் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்கு முன்பே வாகனத்தை நிறுத்தி விடவேண்டும், கட்சிக் கொடிகளை எடுத்து வரக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு! - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
கோவை: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் அலுவலரான ராஜா முகமது அளித்த புகாரின் பேரில், வாக்குச் சாவடிக்கு 100 மீட்டருக்கு முன்பே வாகனத்தை நிறுத்தாமலும், வாகனத்தில் அதிமுக கொடிகளை கட்டியவாறும், கட்சி கறைத் துண்டுகளை போர்த்தியபடியும் வந்ததாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சேலம் மாவட்டத்தில் எடப்பாடி தொகுதியில் அதிகபட்ச வாக்குப்பதிவு