தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வால்பாறை முன்னாள் நகராட்சி ஆணையர் மீது கோவை குற்றப்பிரிவு காவல் துறை வழக்குப்பதிவு - Coimbatore District Crime Branch Police Department

கோவை: பொதுமக்களின் பணத்தை மோசடி செய்ததாக வால்பாறை முன்னாள் நகராட்சி ஆணையர் மீது மூன்று பிரிவுகளின்கீழ் கோவை குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

வால்பாறை முன்னாள் நகராட்சி ஆணையர் மீது கோவை குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு
வால்பாறை முன்னாள் நகராட்சி ஆணையர் மீது கோவை குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு

By

Published : Jun 15, 2021, 7:09 PM IST

கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி ஆணையராக இருந்த பவுன்ராஜ், தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி நகராட்சி நிதி முறைகேடு செய்ததாக கடந்த ஏப்ரல் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டார். இவரின் மீது ஏழு பிரிவுகளின்கீழ் கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

பொதுமக்களிடம் பணம் மோசடி

இந்நிலையில், தற்போது வால்பாறை நகராட்சிக்கு புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சுரேஷ்குமார் என்பவர் பவுன்ராஜ் மீது புதிதாக புகார் அளித்துள்ளார். முன்னாள் வால்பாறை நகராட்சி ஆணையர் பவுன்ராஜ், நகராட்சி மேலாளர் நஞ்சுண்டன், ஒப்பந்ததாரர் மணிகண்டன் ஆகியோர் கூட்டு சேர்ந்து பொதுமக்களின் பணம் 35 லட்சத்து 78 ஆயிரத்து 505 ரூபாயை மோசடி செய்து நகராட்சிக்கு இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வழக்குப்பதிவு

இந்தப் புகாரின்பேரில் மூவர் மீதும் கூட்டு சதி, மோசடி, நம்பிக்கை மோசடி (409, 420r/w 120b) ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் கோவை குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details