கோயம்புத்தூர்: அரசு ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில், ஆகஸ்ட் 10ஆம் தேதி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வீடு, அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் என தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
அத்துடன் எஸ்.பி.வேலுமணியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதனை சட்டரீதியாக சந்திப்போம் என வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வேலுமணி சென்னையிலிருந்து நேற்று (ஆகஸ்ட். 14) கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில், அவருக்கு ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வரவேற்பளித்தனர். அதில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
கோவை விமானநிலையம் முன்பு கூடிய அதிமுகவினர் இந்த நிலையில், பீளமேடு காவல் துறையினர், கரோனா கட்டுபாடுகளை மீறி கூட்டம் கூட்டியதாக, எஸ்.பி.வேலுமணி, கே.ஆர்.ஜெயராமன், அம்மன் அர்ஜுனன், பி.ஆர்ஜி.அருண்குமார், எம்.எஸ்.எம்.ஆனந்த், விஜயக்குமார், கந்தசாமி, செல்ராஜ் உள்பட 50க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:அதிமுக ஆட்சியில் தொடர நான் முக்கிய காரணம் - எஸ்.பி. வேலுமணி!