கோவை மாவட்டம் சரவணம்பட்டி சுற்றுவட்டாரத்தில் தனியார் கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை அதிகளவில் நடப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் இன்று ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து கோவை வந்த காரினை நிறுத்தி சோதனை செய்தனர்.
கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை: இருவர் கைது - கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் விற்பனை
கோயம்புத்தூர்: கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து மற்றும் கஞ்சா உள்ளிட்டவற்றை விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
two arrested in cannabis case coimbatore
அதில் எல்.எஸ்.டி எனும் போதைப்பொருள் தடவிய ஐந்து அட்டை வில்லைகள் மற்றும் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த காவல் துறையினர், சென்னையில் இருந்து போதைப்பொருள்களைக் கடத்தி வந்த ராஜேஸ், பிராங்கிளின் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள இருவரைத் தேடி வருகின்றனர்.
பலசரக்கு கடை உரிமையாளர் மீது பெட்ரோல் குண்டு வீசி அரிவாளால் வெட்டிய கும்பல்!