தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக் கண்காட்சி! - கோவை மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற கேக் கண்காட்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக தத்ரூபமாக உருவாக்கிய கேக் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Cake exhibition in Coimbatore
Cake exhibition in Coimbatore

By

Published : Dec 19, 2020, 3:42 PM IST

கோயம்புத்தூர்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் பேக்கரி நிறுவனத்தினர் கேக் கண்காட்சியை நடத்தி வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டிற்கான கேக் கண்காட்சி இன்று(டிச.19) தொடங்கியுள்ளது.

கரோனா காலத்தில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில், தகுந்த இடைவெளி, முகக் கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கேக்குகளை தயாரித்துள்ளனர். டிசம்பர் 31ஆம் தேதி நடைபெற உள்ள இக்கண்காட்சியில், பிளம் கேக், ப்ரூட் கேக், வால்நட் கேக் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் கேக்குகள் தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்துமஸ் விழா கேக் கண்காட்சி

குறிப்பாக, மருத்துவர் ஒருவர் கையில் தடுப்பூசியுடன் இருப்பது போலவும், கேக்கில் சானிட்டைசர், முகக் கவசம் போன்ற வடிவமைப்புடன், காவல்துறையினர், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் நிற்பது போன்று தத்ரூபமாக உருவாக்கி உள்ளனர். சுமார் 10 கிலோ அளவில் தயாரிக்கப்பட்ட இந்த கேக் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details