தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வீட்டின் சமையலறை சுவரை உடைத்து உணவு சாப்பிட்ட யானை - சிசிடிவி காட்சி - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உதகை அருகே வீட்டின் சமையலறை சுவரை உடைத்து உணவு சாப்பிட்ட காட்டு யானையின் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

By

Published : Jun 27, 2022, 6:05 PM IST

உதகை அருகே உள்ள மசினகுடி ஊருக்குள் சமீப காலமாக ஒற்றை காட்டு யானை இரவு நேரங்களில் உலா வருகிறது. வீடு வீடாக செல்லும் அந்த யானை வாழை, தென்னை, மா மரங்களை சேதப்படுத்தி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குரூப்அவுஸ் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் நுழைந்த அந்த யானை ஒரு வீட்டின் சமையலறைக்கு பின்புறம் சென்றது.

சிசிடிவி காட்சி

பின்னர் தலையால் முட்டி சுவரை இடித்த அந்த யானை தனது தும்பி கையை சமையலறைக்குள் விட்டு உணவு பொருட்களை தேடியது. இதனையடுத்து உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்ட பின்னர் மற்ற பொருட்களை கீழே தள்ளிவிட்டு சேதப்படுத்தியது.

இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

இதையும் படிங்க:வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details