தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மோடிக்கு கருப்புக்கொடி! - தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு! - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

கோவை: இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்த மோடிக்கு, தேர்தல் பிரச்சாரத்திற்கு கோவை வரும்போது கருப்புக்கொடி காட்டப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

tpdk
tpdk

By

Published : Mar 24, 2021, 8:21 PM IST

Updated : Mar 26, 2021, 2:55 PM IST

ஈழத்தமிழினப் படுகொலை குறித்து இலங்கைக்கு எதிராக ஐநா மன்றத்தில் பல்வேறு நாடுகளும் புகார் செய்ததை தொடர்ந்து, மனித உரிமை மீறல்கள் தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.

இதில் 12 நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நிலையில், இந்தியா உள்ளிட்ட 11 நாடுகள் நடுநிலையாக இருப்பதாகக் கூறி, இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. இந்தியாவின் இத்தகைய செயலுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை கண்டித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மோடிக்கு கருப்புக்கொடி! - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

இந்நிலையில், இலங்கையில் நடந்தது அப்பட்டமான இனப்படுகொலை என்று தெரிந்தும், இந்தியா இதில் இலங்கைக்கு எதிராக வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்ததற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதன் பொதுச்செயலாளர், கு.ராமகிருஷ்ணன், “ இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா தவிர்த்தது ராஜபக்சவிற்கு ஆதரவாக இந்தியா இருப்பதை காட்டுகிறது. தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காத பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரத்திற்காக 30 ஆம் தேதி கோவை வரும்போது அனைத்து கட்சி சார்பில் கருப்புக் கொடி காட்டுவோம்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 8,000 கோடி ரூபாயில் சொகுசு விமானம் வாங்கிய மோடி!

Last Updated : Mar 26, 2021, 2:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details