தமிழ்நாடு

tamil nadu

'பாஜகவின் போராட்டம் கேலிக்குரியது' - ஜி. ராமகிருஷ்ணன்

By

Published : Nov 18, 2021, 6:39 PM IST

வ.உ. சிதம்பரனாரின் 85ஆவது நினைவு தினத்தையொட்டி கோவை சிறையில் வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு ஜி ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஒன்றிய அரசையும், தமிழ்நாடு பாஜக-வையும் விமர்சித்துப் பேசினார்.

”பாஜகாவின் போராட்டம் கேலிக்கூரியது”- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன்

கோயம்புத்தூர்: வ.உ. சிதம்பரனாரின் 85ஆவது நினைவு தினத்தையொட்டி, கோவை மத்திய சிறையில் வ.உ. சிதம்பரனார் செக்கிழுத்த செக்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், ' அந்நிய ஆதிக்கம் இருக்கக் கூடாது என்பதற்காக பாடுபட்டவர், வ.உ. சிதம்பரனார். இதற்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஆனால், இன்று ஒன்றிய அரசு இந்தியப் பொருளாதாரத்தை பன்னாட்டு நிறுவனங்களிடம் அடகு வைக்கக் கூடிய மோசமான கொள்கையை கடைபிடிக்கிறது' எனக் குற்றஞ்சாட்டினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன்

மேலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜக போராட்டம் அறிவித்துள்ளது கேலிக்குரியது எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:மோசடி புகார் - ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details