கோயம்புத்தூர்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் கொடிசியா மைதானத்தில் பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் பொது கூட்ட மேடைக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர்கள் வி.கே சிங், கிசான் ரெட்டி. பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன், “பிரதமரைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளனர். பிரதமர் - முதலமைச்சர் சந்திப்பு 10 நிமிடம் தான் நடைபெற்றது. அவர்கள் என்ன பேசினார்கள் என தெரியவில்லை” என்று கூறினார்.
லவ் ஜிகாத் விவகாரத்தில் இந்து இளைஞர்கள் பழிவாங்க வேண்டும் - பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
பெட்ரோல் டீசல் விலை எங்களை பாதிக்காது
தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை குறித்துக் கேள்வியெழுப்பிய செய்தியாளர்களுக்குப் பதிலளித்த அவர், இது பாஜகவின் வாக்கு வங்கியை என்றும் பாதிக்காது எனத் தெரிவித்தார்.
பிரதமர் கலந்துகொள்ளும் கூட்ட அரங்கிற்கான பூமி பூஜையில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசிய அவர், “கரோனாவால் உலகளவில் விலைவாசி உயர்ந்துள்ளது. அதேபோல தான் பெட்ரோல் டீசல் விலையும். பெட்ரோல் டீசல் விலை நாம் தீர்மானிப்பது அல்ல. அது உலக சந்தையைப் பொறுத்தது. அரசு எந்த வரியையும் உயர்த்தவில்லை. மாறாக விலையைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.
பெட்ரோல் டீசல் விலையேற்றம் குறித்த உண்மை நிலவரம்
2014ஆம் நரேந்திர மோடி அரசு பதவியேற்றபோது பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.9.48ஆகவும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.3.56 ஆகவும் இருந்தது. உலகளவில் ஏற்பட்ட கரோனா பெருந்தொற்று தாக்கத்தினால் கச்சா எண்ணெய் தேக்கமடைந்தது. அப்போது, அதன் விலை வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய மத்திய அரசு, லாபங்களை ஈட்ட, நவம்பர் 2014 முதல் ஜனவரி 2016 வரை ஒன்பது முறை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது.
தொடர்ந்து 15 மாதங்களில், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.11.77 ஆகவும், டீசல் வரி லிட்டருக்கு ரூ.13.47 ஆகவும் உயர்த்தப்பட்டது. இது அரசுக்கு 2016-17ஆம் நிதியாண்டில் இரண்டு மடங்கிற்கும் மேலாக; அதாவது ரூ.2,42,000 கோடி வருவாய் ஈட்டித்தர உதவியது. இதுவே, 2014-15ஆம் நிதியாண்டில் ரூ.99,000 கோடி மட்டும் தான் அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியிலிருந்து வருவாய் ஈட்டியதென்பது குறிப்பிடத்தக்கது.
"இந்து மதத்தை இழிவுப்படுத்தினால் நாக்கை துண்டிக்க பயப்படவேண்டாம்" ஆதீனம் சிவலலிங்கேஸ்வரர்
இச்சூழலில், அக்டோபர் 2017இல் கலால் வரியை ரூ.2 ஆகவும், 2018இல் ரூ.1.50 ஆகவும் குறைத்தது. ஆனால் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்ட அரசு, ஜூலை 2019இல் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 என உயர்த்தியது. மீண்டும் மார்ச் 2020இல் ரூ.3 உயர்த்தியது. அந்த ஆண்டே மே மாதத்தில், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.13ஆகவும் உயர்த்தியது. மொத்தமாக மே 2020 நிலவரப்படி, பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.32.98ஆகவும், டீசல் மீதான கலால் வரி ரூ.31.83ஆகவும் அரசு உயர்த்தியிருந்தது.
பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி உண்மை நிலவரம் இப்படியிருக்க, மத்திய பாஜக அரசு ஆதரவாளர்களும் தலைவர்களும் பொய் தகவல்களை பகிர்ந்து வருவது பொதுமக்களிடத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.