கோவை: ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் பப்பிஸ் ஹோட்டலில் கடந்த 11ஆம் தேதி மதுவுடன் கூடிய நடன நிகழ்விற்கு பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன் மற்றும் அவரது நண்பர்கள் சென்றனர். அப்போது ஜோடிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் ஓட்டல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்ட நிலையில், ஹோட்டல் நிர்வாகத்தின் சார்பில் கணக்காளர் விஷ்வபாரதி ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஜான்சன் மற்றும் அவருடன் வந்த லட்சுமணன், டேவிட்,ஜெரிஷ் ஆகிய நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.