கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால், கோவையில் கிறிஸ்துமஸ் தொடர்பான நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்றுகொண்டு இருக்கின்றன. இந்நிலையில் கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடியபடி "கேரல்" குழுவினர் சென்றுகொண்டிருந்தபோது, சத்தமாக பாடல் பாடி செல்வதற்கு பா.ஜ.க இளைஞர் அணி செயலாளர் பிராகாஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அப்போது கேரல் கூட்டத்தை நடத்தி வந்த ஜெபக்குமார் என்பவருக்கும், பிரகாஷிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பிரகாஷ் , ஜெபக்குமாரை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து இது குறித்து ஜெபக்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாஜக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரகாஷை சாய்பாபா காலனி காவல் துறையினர் கைது செய்தனர்.