தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சொந்த பலத்தில் நிற்க திமுகவிற்கு திராணியில்லை - அண்ணாமலை தாக்கு - bjp leader annamalai ips press meet

திமுகவினர் 2021 தேர்தலில் அவர்களது பலத்தில் நிற்கத் தகுதியில்லை என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ்
பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ்

By

Published : Feb 1, 2021, 6:45 AM IST

Updated : Feb 1, 2021, 8:06 AM IST

கோயம்புத்தூர்: தெற்கு மாவட்டம், பாஜக நடத்திய அணி மற்றும் பிரிவு அணிக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் முன்னாள் மாநில நிர்வாகிகள், மாநிலப் பிரிவு நிர்வாகிகள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை, 'பாஜகவுக்கு இந்தியா முழுவதும் 17 கோடி தொண்டர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது 10 லட்சம்வரை தொண்டர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. அதிமுக பாஜக கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும்.

2021ல் பாஜக தமிழ்நாட்டில் மிகப்பெரும் சக்தியாக உருவாகும். கடந்த தேர்தலைவிட நான்கு மடங்காக ஓட்டு வங்கி உயரும். வங்கத் தேர்தலில் கட்சிகளை வழிநடத்தும் தொழில்நுட்பப் பிரிவை வைத்துத் தேர்தலைச் சந்தித்து வந்தனர். அதுபோலவே தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் தினந்தோறும் மக்களைச் சந்தித்து ஏமாற்றி வருகிறார்.

வாரத்திற்கு ஒருமுறை மக்களைக் குழப்புவதற்காக திமுக புது புது யுக்திகளைக் கையாளுகிறது. திமுக கட்சியினர் அவர்களது பலத்தில் நிற்கத் தகுதி இல்லாதவர்கள். வரும் தேர்தலில் திமுகவின் அஸ்திவாரம் ஆட்டம் காணப்போகிறது' என்றார்.

Last Updated : Feb 1, 2021, 8:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details