கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது.
இதில், திமுக அதிக இடங்களைக் கைப்பற்றியது. அதன் ஒரு பகுதியாக துடியலூர் அடுத்த குருடம்பாளையம் ஊராட்சியிலுள்ள 9ஆவது தொகுதியில், திமுக நிர்வாகி அருள்ராஜ், அதிமுக நிர்வாகி வைத்தியலிங்கம், பாஜக நிர்வாகி கார்த்திக், தேமுதிக நிர்வாகி ரவிக்குமார் உள்ளிட்டோர் சுயேச்சை வேட்பாளர்களாக இத்தேர்தலில் போட்டியிட்டனர்.
இதில் திமுக நிர்வாகி அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்ததாக சுயேச்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 வாக்குகளையும், அதிமுக நிர்வாகி வைத்தியலிங்கம் 196 வாக்குகளையும் பெற்றனர். இந்நிலையில், அந்தத் தொகுதியில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.