கோவை: பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிளிச்சி ஊராட்சி வேலன் நகரில் கார்த்திக் என்பவர் தனது மனைவி பூர்ணிமா பெயரில் வாங்கிய இரு மனையிடங்களுக்கு கட்டட வரைபட அனுமதி கோரி ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இதற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணமாக ரூ.21,092 செலுத்தியுள்ளார். குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர் கார்த்திக் ஊராட்சி தலைவரான சாவித்திரியிடம் பிளான் அப்ரூவல் குறித்து கேட்டபோது, தனது கணவர் ராஜனிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே கட்டட வரைபட அனுமதி வழங்க இயலும் என சாவித்திரி தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக், பணம் தர இயலாது எனக் கூறவே, ரூ.15 ஆயிரம் கொடுங்கள் என கேட்டுள்ளார். இதையும் தர மறுத்தால் பிளான் அப்ரூவல் வழங்க இயலாது என ஊராட்சி தலைவர் சாவித்திரியும் அவரது கணவரான ராஜன் என்பவரும் கார்த்திக்கிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்புதுறையில் கார்த்திக் அளித்தப் புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கார்த்திக்கிடம் ரூ.15 ஆயிரத்தை கொடுத்து ஊராட்சி அலுவலகத்திற்கு அனுப்பினர்.