பொள்ளாச்சி அருகே உள்ள சர்க்கார் பகுதியில் 8ஆம் தேதி நள்ளிரவில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட மண்சரிவில் பூர்வ குடி மக்களின் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நான்கு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலைவாழ் பூர்வகுடிகளுக்கு உதவிக்கரம்! - Assistance for tribes
கோவை: மண் சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும், வீடுகளை இழந்தோருக்கும் உதவித் தொகைகள், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
sarkarpathy tribe
மேலும், தனியார் அமைப்புகளும், தன்னார்வலர்களும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். அந்தவகையில், மலைவாழ் மக்களுக்கு ‘உதவும் இதயங்கள்’ அமைப்பின் சார்பில் செடி கொடிகள், தனியார் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்கிற இடத்தில் பயன்படுகிற வகையில் 30 குடும்பங்களுக்கு அரிவாள் ஆகியன வழங்கப்பட்டது.