கோவை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் கொலை வழக்கில் 31 ஆண்டுகாலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்தது. முன்னதாக, அவர் உட்பட தமிழ்நாட்டில் 7 பேரின் விடுதலைக்காக பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றன.
பேரறிவாளனின் தாயாருக்கு பாராட்டு விழா:இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது மகனின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, இவருக்கு நேற்று (ஜூலை2) கோவையிலுள்ள தனியார் அரங்கு ஒன்றில் அனைத்து சமூக இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக, '31 ஆண்டு கால நெடிய வரலாற்றுப் போராட்டத்தில் தாய் அற்புதம்மாள்' என்ற தலைப்பில் பேரறிவாளனின் தாயாருக்குப் பாராட்டு விழா நடத்தினர்.
அற்புதம்மாளின் தியாகம் குறித்தும், அவரது மகனுக்காக தனி ஒருவராக நியாயமே வெல்லும் என்ற தன்னம்பிக்கையை மட்டும் கொண்டு மகனின் விடுதலைக்காக அயராது பாடுபட்டது குறித்தும் அவ்விழாவில் கலந்து கொண்ட பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பேசினர். மேலும் அப்போது அவர்கள், பேரறிவாளன் விடுதலையைப் போலவே இவ்வழக்கில் உள்ள மற்றவர்களும் விடுதலை ஆவார்கள் என நம்பிக்கைத் தெரிவித்தனர்.
ஒற்றுமையுடன் போராடியவர்களுக்கு நன்றி:இதைத்தொடர்ந்து அற்புதம்மாள் பேசுகையில், 'சாதி, மதம், கட்சி கடந்து எனது மகனின் விடுதலைப்போராட்டத்திற்குப் பலர் வந்தனர். பலர் உடன் இருந்ததால் என் மகனின் விடுதலை சாத்தியம் ஆனது. அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன். கோவையில் இருந்து நன்றி நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது.
சட்டப்போராட்டமே வெற்றி தரும்: நான் 31 ஆண்டு காலம் ஓடினேன். காலம் நேரம் நான் பார்க்கவில்லை. அதேபோல, பல போராட்டங்களுக்குச் சென்றேன். இருப்பினும் விடுதலை சாத்தியப்படும் முன் போராட்டங்களில் கலந்துகொள்ளவில்லை.