தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பணியில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு ஆயுதப் படை நிதியுதவி - ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு ஆயுதப் படை நிதியுதவி

பணியின் போது உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு கோவையை சேர்ந்த ஆயுதப்படை காவலா்கள் பணம் வசூல் செய்து நிதியுதவி அளித்தனர்.

ஆயுதப் படை நிதியுதவி
ஆயுதப் படை நிதியுதவி

By

Published : Mar 17, 2022, 10:20 AM IST

கோவை மாவட்ட ஆயுத படையில் முதல்நிலை காவலராக பணிபுரிபவர் பாபு . சமூக ஆா்வலரான இவர் தன்னுடன் பணிபுரியும் சக காவலர்களிடம் பணம் வசூல் செய்து பணியின் போது உயிரிழக்கும் காவலர்களின் குடும்பம் மற்றும் ஏழை, எளியோருக்கு அவ்வப்போது உதவி செய்து வருகிறார். முக்கியமாக காவல் துறை மற்றும் ராணுவத்தில் பணியாற்றும் போது உயிரை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக, நண்பாக்கள் மற்றும் சக காவலர்களை ஒருங்கிணைக்க உதவும் கரங்கள் என்ற குழு அமைத்து அதன் மூலமாக உதவிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இராணுவத்தில் பணியாற்றி வந்த தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கம்மாளப்பட்டி பகுதியை சோந்த பூபதி என்ற வீரர் விபத்தில் உயிரிழந்தார். இதே போல எல்லை பாதுகாப்பு படையில் வேலை பார்த்து திருவண்ணாமலை மாவட்டத்தை சோந்த பிரகாஷ் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

ஆயுதப் படை காவலர் நிதியுதவி

இந்நிலையில் ஆயுதப்படை காவலர் உயிரிழந்த இரு வீரர்களின் குடும்பத்திற்காக சக காவலர்கள் மற்றும் நண்பர்களிடம் நன்கொடை வசூல் செய்தார். இரண்டு லட்சம் ரூபாய் நிதி திரட்டிய நிலையில், கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் சார்பாக இரு குடும்பத்தினரிடமும் நிதி உதவியினை காவலர் பாபு வழங்கினார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா லட்சம் வீதம் உதவி தொகை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:போக்குவரத்துத்துறையில் தொடரும் ரெய்டு - ரூ.1.79 ரொக்கம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details