தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எடப்பாடி பழனிசாமி வருகை... போலீசாருக்கும் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் இடையே வாக்குவாதம்... - Pollachi Jayaraman

அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி கோவை மாநகர போலீசாருக்கும் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 11, 2022, 12:24 PM IST


கோயம்புத்தூர்: தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கோட்டூரில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று (செப்.11) பொள்ளாச்சி வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக பொள்ளாச்சி நகர அ.தி.மு.கவினர் பல்வேறு ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். அந்த வகையில் கோவை ரோடு காந்தி சிலை அருகே பெரிய மேடை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

எடப்பாடி பழனிசாமி வருகை... போலீசாருக்கும் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் இடையே வாக்குவாதம்...

இந்த தகவலை அறிந்த போலீசார் அங்கு விரைந்து உரிய அனுமதி பெறாமல் மேடை அமைக்க கூடாது என்று தெரிவித்துள்ளனர். அப்போது அங்கிருந்து பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையான அனுமதி பெறாததால் மேடை அமைக்க, அனுமதிக்க முடியாது என்று போலீசார் உறுதியாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: “சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம்”

ABOUT THE AUTHOR

...view details