தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவை ராஜவீதியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை! - சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் சோதனை

கோயம்புத்தூர்: ராஜவீதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

raid in Coimbatore
raid in Coimbatore

By

Published : Nov 7, 2020, 6:05 PM IST

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் ராஜவீதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில், ஐந்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். சார் பதிவாளர் கார்த்திகேயனின் அறை, அலுவலக வளாகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையின் போது பதிவாளர் அலுவலகத்துக்குள் இருந்த இடைத்தரகர்கள் மற்றும் பத்திரப் பதிவுக்கு வந்தவர்களிடமும் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த சோதனையில், கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

ABOUT THE AUTHOR

...view details