கோயம்புத்தூர்:அன்னூர் அருகே டிட்கோ சார்பில் 3800 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டை அமைக்க உழவர் நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து ஐந்து ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்திவரும் சூழலில் அன்னூர் பகுதியில் உள்ள குன்னிபாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வாக்கனாங் கொம்பு, ஆத்திக்குட்டை, குழியூர் ஆகிய ஐந்து கிராம உழவரை அண்ணாமலை நேரில் சந்தித்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களிடையே பேசினார்.
அப்போது அத்திக்கடவு திட்டத்தினால் நீர் பற்றாக்குறை தீர்ந்து வேளாண்மை செழிக்கும் சூழலில் தொழில்பேட்டைகளை வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படும்போது என்பது உழவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்பேட்டையை நீர் இல்லாத வறட்சியான பகுதிகளில் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அவர் இதற்காக பாரதிய ஜனதா எந்த அளவிற்கும் போராட்டத்தை முன்னெடுக்கும் எனத் தெரிவித்தார்.
மேலும் தொழிற்பேட்டை அமைக்க வேளாண் நிலத்தைக் கையகப்படுத்தினால் கிராமங்களில் சாதிச் சண்டைகள் உருவாகும் என கிராம மக்கள் மத்தியில் பேசிய அவர் தொடர்ந்து கன்னட மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் வாக்கனாங் கொம்பு, ஆத்திக்குட்டை ஆகிய கிராமங்களில் அண்ணாமலை கன்னடத்தில் பேசினார்.
விவசாயிகளுடனான சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை “அன்னூர் வட்டாரத்தில் 3,800 ஏக்கர் விளைநிலத்தில் தொழிற்பேட்டை அமைக்க தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக் கழகம் சார்பில் வலுக்கட்டாயமாக முயற்சி எடுத்துவருகின்றனர். இங்குள்ள நீர்வளத்தைக் குறிவைத்து தொழிற்பேட்டை அமைக்க முயற்சிக்கின்றனர்.
இங்குள்ள உழவரை வேளாண்மை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் வானம் பார்த்த பூமி உள்ள பிற இடங்களில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். இங்கு அமைக்கக் கூடாது. அதையும் மீறி தொழிற்பேட்டை அமைக்க முயற்சி செய்தால், போராட்டங்களை நடத்த பாஜக தயங்காது.