செப்டம்பர் 5ஆம் தேதியன்று இலங்கையிலிருந்து தோணியில் கள்ளத்தனமாக ராமேஸ்வரம் வந்த இலங்கை கொழும்புவைச் சேர்ந்த ஒருவரை ராமேஸ்வரம் காவல் துறையினர் பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் இலங்கையில் காவலர் என்பதும், அவர் பெயர் பிரதீப்குமார் பண்டாரக்கா (31) என்பதும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டுவருபவர் என்பதும் தெரியவந்தது.
அங்கொடா லொக்கா: இலங்கை காவலர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - சிபிசிஐடி
கோயம்புத்தூர்: அங்கோடா லொக்கா வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை காவலர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
மேலும் சிபிசிஐடி விசாரித்துவரும் அங்கொடா லொக்காவைத் தெரியும் என்று கூறியதால் இவரை கோவையில் உள்ள சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் ராஜு தலைமையில் காவலர்கள் அங்கு சென்று விசாரித்துவிட்டு வந்தனர். அவரிடம் தேவைப்பட்டால் காணொலி மூலம் அங்கொடா லொக்கா குறித்து மேலும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், விசாரணைக்காக துணை கண்காணிப்பாளர் ராஜு கேட்டுக்கொண்டதற்கு இணங்க காவல் துறைத் தலைவர் ஜே.கே. திரிபாதி உத்தரவின்பேரில் இலங்கை காவலர் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இவரிடம் கோவை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் ராஜு தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த விசாரணை ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.