தமிழ்நாடு

tamil nadu

பிணையில் எடுக்க ஆளில்லாததால் சிறையிலிருக்கும் அங்கோடா வழக்கு குற்றவாளிகள்!

By

Published : Oct 13, 2020, 9:17 PM IST

நீதிமன்றம் பிணை வழங்கியும், பிணையில் எடுக்க ஆள் இல்லாததால், அமானி மற்றும் சிவகாமசுந்தரி தொடர்ந்து சிறையிலேயே இருந்து வருகின்றனர்.

angoda-case
angoda-case

கோயம்புத்தூர்:இலங்கை நிழல் உலக தாதாவான அங்கோடா லொக்கா, சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்து பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்ததாகவும், கடந்த ஜூலை மாதம் கோவையில் உயிரிழந்த அவரது உடல் மதுரை தத்தநேரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி காவலர்கள் அங்கோடா லொக்காவின் காதலி அமானி தான்ஜி , அவரது நண்பர் தியானேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் சிவகாமசுந்தரி உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்

இவர்கள் பிணை கேட்டு தாக்கல் செய்த வழக்கு, கடந்த அக்.7ம் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தோத்திரமேரி மூன்று பேருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில் குற்றவாளிகளை பிணையில் எடுக்க பிணை ஏற்க யாரும் முன் வராததால் அமானி தான்ஜி சென்னை புழல் சிறையிலும், சிவகாமசுந்தரி கோவை மத்திய சிறையிலும் இருக்கின்றனர்.

தியானேஸ்வரன் மட்டும் பெருந்துறை சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளார். தியானேஸ்வரன் கோவை சிபிசிஐடி அலுவலகம் அல்லது பெருந்துறை நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :ஒப்புதலின்றி தகனம் செய்தார்கள் - ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் வாக்குமூலம்

ABOUT THE AUTHOR

...view details