தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! - anganwadi staffs protest in coimbatore news

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Anganvadi protest
Anganvadi protest

By

Published : Jan 29, 2021, 2:45 PM IST

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் இன்று (ஜன. 29) முற்றுகையிட்டு ஊர்வலமாக வந்தனர்.

அவர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது அவர்கள், "30 ஆண்டுகாலமாக காலமுறை ஊதியம் கேட்டும் இன்றுவரை வழங்கப்படவில்லை, அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை நிரந்திரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், முறையான ஒய்வூதியம் வழங்கிட வேண்டும், ஓய்வுபெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்குப் பணிக்கொடையாக தற்போது கொடுக்கப்படும் ஒரு லட்ச ரூபாயினை ஐந்து லட்சமாக உயர்த்த வேண்டும்,

தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும், இல்லையெனில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள், பிப்ரவரி 5ஆம் தேதி சென்னை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க...வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கி குவித்த பாண்டியன்!

ABOUT THE AUTHOR

...view details