ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் காலநிலை மாற்ற அவசரநிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கும் பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பசுமை தாயகம் சார்பில் காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் இந்தியாவில் காலநிலை அவசர பிரகடனம் செய்வது தொடர்பாக பிரதமரையும் தமிழ்நாடு முதலமைச்சரையும் சந்தித்து முறையிட இருப்பதாகவும் தெரிவித்தார்.