கோவை மதுக்கரை மோகன்நகரில் 200-க்கு மேற்பட்ட வீடுகளும், சிறு குறு தொழிற்சாலைகளும் உள்ளன. இப்பகுதியில் நேற்று (ஜூன்8) நள்ளிரவு நேரத்தில் வட மாநில இளைஞர் ஒருவர் உலா வந்தது, வீடு ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அதில், நள்ளிரவு நேரத்தில் ஒரு சில வீடுகளை வெளியே இருந்தவாறு கண்காணிக்கும் அவர், ஒரு வீட்டிற்குள் கேட்டை திறந்து உள்ளே சென்று நோட்டமிட்டுள்ளார். நாய் தொடர்ந்து குறைத்ததால் அங்கிருந்து செல்கிறார். இதேபோல, பல வீடுகளை நோட்டமிட்டவாறு அவர் திரிவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.