அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி கோவை அண்ணா சிலை முதல் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வரை நீலச்சட்டை பேரணி நடைபெற்றது. 150 அமைப்புகளைச் சேர்ந்த பலர் நீல நிற உடைகளை அணிந்து பேரணியில் பங்கேற்றனர்.
பேரணியின் தொடக்கத்தில் சிறுவர்கள், பெரியவர்கள் சிலம்பம் சுழற்றியபடியே பேரணியில் பங்கேற்றனர். அதன் பின் வந்தவர்கள் தங்கள் அமைப்புகளின் கொடிகளை கையில் ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர். இந்த பேரணியில் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழ் புலிகள் என பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
பேரணியைத் தொடர்ந்து மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியின் அருகே சாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.