கோவை மாவட்டம், சூலூரில் உள்ள இந்திய விமானப்படையின் விமானப்படை தளத்தை ஏர் மார்ஷல் விபாஷ் பாண்டே இன்று (செப்.29) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருக்கு விமானப் படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், விமானப் படை தளத்தின் பழுதுபார்ப்பு மையத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு சென்று அவர் ஆய்வு செய்தார்.
சூலூர் விமானப்படை தளத்தில் ஏர் மார்ஷல் விபாஷ் பாண்டே ஆய்வு - சூலூர் விமானப்படையின் விமான தளத்தில்
கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்தை ஏர் மார்ஷல் விபாஷ் பாண்டே பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Etv Bharat
அப்போது, மேக் இன் இந்தியா, ஆத்மநிர்பார் பாரத் ஆகிய திட்டங்களின் கீழ் வெளிநாட்டில் தயாரிக்கப்படும் உதிரிபாகங்களை தவிர்த்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களை பயன்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விபாஷ் பாண்டேவிடம் அதிகாரிகள் விளக்கினர்.
இதையும் படிங்க: சென்னையில் ரூ.174.48 கோடி மதிப்பீட்டில் வெள்ளத் தடுப்புப் பணிகள்... முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு...