கோயம்புத்தூர்: மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மேயர் கல்பனா தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி நிதி முறையாக பயன்படுத்தபடுவதில்லை எனவும் நிதி நெருக்கடி இருக்கும் நிலையில் மேயர் இல்லத்தை ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைப்பதை கண்டித்தும் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், சர்மிளா, ரமேஷ் ஆகிய மூவரும் வெளிநடப்பு செய்தனர்.
மேலும் பதாகைகளுடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்த அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், மாநகராட்சி பொது நிதியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படுவதில்லை எனவும், அதே வேளையில் மேயர் வீட்டை ஆடம்பரமாக பங்களாவாக மாற்ற ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.