கோயம்புத்தூர்: அதிமுக பொதுக்கூட்டங்கள், ஜெயலலிதா பிறந்தநாள், எம்ஜிஆர் பிறந்தநாள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று டிரம்ஸ் இசைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவர் சுப்பிரமணியம்.
சுமார் பத்தாண்டு காலம் இவர் பங்கேற்ற கூட்டங்கள் ஏராளம். இதனால் தலைவர்கள் தொடங்கி அதிமுக தொண்டர்கள் வரை எல்லோருக்கும் இவரை நன்கு தெரியும்.
அதிமுகவிற்கு டிரம்ஸ் இசைத்தவர் திமுகவிற்கு மாறினார் இந்நிலையில், சுப்பிரமணியத்திற்கு அதிமுக உதவிகள் எதுவும் செய்யாததால் அதிமுகவிற்கு டிரம்ஸ் இசைத்தவர் தற்போது திமுகவிற்காக டிரம்ஸ் இசைத்து பாடி பரப்புரை மேற்கொள்கிறார்.
பொள்ளாச்சி புதிய, பழைய பேருந்து நிலையங்கள், கடைவீதி உள்பட நகர பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் திமுகவிற்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.
இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் இறுதி பட்டியல் இன்று வெளியீடு