கோயம்புத்தூர்:விளாங்குறிச்சி சாலை சேரன்மாநகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகளை டாஸ்மாக் ஊழியர்கள் செய்து வந்தனர்.
அங்கு மதுபாட்டில்களை வைக்கும் பணியில் அதன் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல் பரவியது. அதன் பேரில் அதிமுக சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் தொண்டர்களுடன் வந்து, அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டார்.