கோயம்புத்தூரில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளான அனுராதா என்கிற ராஜேஸ்வரியின் பெற்றோர் மருத்துவ உதவி தரக்கோரியும், அவருக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கோரியும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் மனு அளித்தனர்.
அதிமுக கொடிக்கம்பம் விபத்து; காலிழந்த பெண்ணுக்கு நிதியுதவி கோரும் பெற்றோர்! - அதிமுக கொடி கொலை
கோயம்புத்தூர்: அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளான ராஜேஸ்வரிக்கு மருத்துவ உதவி, வேலை வாய்ப்பு வழங்கக் கோரி ராஜேஸ்வரியின் பெற்றோர் அமைச்சர் வேலுமணியிடம் மனு அளித்தனர்.
நவம்பர் 11ஆம் தேதி கோவை அவிநாசி சாலையில் உள்ள கோல்டுவின்ஸ் பகுதியில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்த விபத்தில் லாரி மோதி சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்கிற அனுராதா என்கிற பெண் படுகாயமடைந்தார். அதனால் ராஜேஸ்வரியின் இடது கால் இரு தினங்களுக்கு முன் அகற்றப்பட்டது.
இந்த நேரத்தில் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து அவரின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கினார். இன்று சுகுணாபுரம் பகுதியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை, ராஜேஸ்வரியின் பெற்றோர் நாகநாதன் - சித்ரா தம்பதி, அமைச்சர் வீட்டில் சந்தித்து மருத்துவ உதவி செய்து தரக் கோரியும், வேலை வாய்ப்பு வழங்கக் கோரியும் மனு அளித்தனர்.