தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’பட்டியல் இனத்தை இழிவுபடுத்துகிறார் அமைச்சர் வேலுமணி’ - அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

கோவை: அரசியல் ஆதாயத்திற்காக பட்டியல் இனத்தை சார்ந்தவர்களை அடியாள் போல் நடத்தி இழிவுபடுத்துவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

tamilar
tamilar

By

Published : Jan 6, 2021, 8:49 PM IST

நான்கு நாட்களுக்கு முன்பு கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் திமுக நடத்திய கிராம மக்கள் சபை கூட்டத்தில், அதிமுகவை சேர்ந்த பெண் ஒருவர் திமுக தலைவர் ஸ்டாலினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அமைச்சர் வேலுமணி அனுப்பிய பெண் நீங்கள், உங்களுக்கு பதில் கூற முடியாது என் ஸ்டாலின் தெரிவித்தார். பின்னர் காவல்துறையினர் அவரை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் அப்பெண் அமைச்சர் வேலுமணியுடன் செல்போனில் பேசும் வீடியோவும் வெளியாகி சமூக வலைதளங்களில் சர்ச்சையானது

அரசியல் ஆதாயத்திற்காக பட்டியல் இனப்பெண்ணை, அடியாள் போல் நடத்தி பட்டியலின சமுதாயத்தை இழிவுபடுத்தும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

’பட்டியல் இனத்தை இழிவுபடுத்துகிறார் அமைச்சர் வேலுமணி’

இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கு! - அமைச்சர் வேலுமணியையும் விசாரிக்க திமுக வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details