தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 28, 2019, 11:33 PM IST

ETV Bharat / city

கோவையில் நடிகை கவுதமி தேர்தல் பரப்புரை

கோவை: சிறுவாணி சாலையிலுள்ள காளம்பாளையத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் தனலட்சுமிக்கு ஆதரவாக நடிகை கவுதமி வாக்குகள் சேகரித்தார்.

Actress Gauthami election campaign in Coimbatore
Actress Gauthami election campaign in Coimbatore

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் முடிந்த நிலையில், அடுத்தகட்ட தேர்தல் 30ஆம் தேதி நடக்கிறது.

இந்த நிலையில் கோவை சிறுவாணி சாலையில் உள்ள காளம்பாளையத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தனலட்சுமிக்கு ஆதரவாக நடிகை கவுதமி இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தனலட்சுமியை பெருவாரியான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என வாக்காளர்களிடத்தில் கேட்டுக்கொண்ட நடிகை கவுதமி, தேர்தல் முடிந்த பின்னரும் மக்களை காண வருவேன் என்றும் உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கவுதமி, “உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள். வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்படும்.” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர் அவரிடம் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கவுதமி, “இந்த தேர்தலுக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இந்த சட்டத்தால் எந்த இந்தியரும் பாதிக்கப்படமாட்டார்கள். ஆனால் வேண்டுமென்றே சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்” என்றார்.

போராட்டக்காரர்கள் குறித்த கேள்விக்கு, “சிலர் புரிந்துக் கொள்ளாமல் பேசினார்கள். தற்போது மக்கள் புரிந்துக் கொண்டுள்ளனர். சிலர் வேண்டுமென்றே போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்” என்றார்.

கோவையில் நடிகை கவுதமி தேர்தல் பரப்புரை
“தமிழ்நாட்டிற்கு நிர்வாக திறன் மிக்க பட்டியலில் முதலிடம் கிடைத்தது அங்கீகாரம்” என அதுதொடர்பான கேள்வியொன்றிற்கு பதிலளித்தார். நடிகை கவுதமி செய்தியாளர்கள் சந்திப்பின்போது பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உடனிருந்தார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வானவர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details