தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நடிகர் சங்க கட்டட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு! - 33 அடி அகல சாலை

சென்னை: பொதுப்பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

By

Published : Aug 1, 2019, 4:25 AM IST

சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் காட்டியதாகக் கூறி வித்யோதயா காலனியைச் சேர்ந்த ஸ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, கட்டடப்பணிகளை மேற்கொள்ள தடைவிதித்தது.

பின்னர் விசாரணை அறிக்கையில், சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படவில்லை என தெரிவித்ததால், கட்டடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அமர்வில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் ஸ்ரீரங்கன் ஆஜராகி, தன் பக்க ஆதாரங்களை கொடுத்து நடிகர் சங்க கட்டடம் கட்டுவதில் எனக்கு தனிப்பட்ட ஆட்சேபனை இல்லை எனவும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சாலை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் மீட்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அவரது வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details