தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நான்கு ஊராட்சியின் கீழ் ஒரு கிராமம்!

இரண்டு பாராளுமன்ற தொகுதி, 2 சட்டப்பேரவை தொகுதி, 3 ஊராட்சி ஒரு பேரூராட்சி என உள்ளாட்சி அமைப்பின் கீழ் உள்ள கிராம மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் பொன்னாண்டம்பாளையம் கிராமம் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு.

A village under four panchayats panchayats நான்கு ஊராட்சியின் கீழ் ஒரு கிராமம் கருமத்தம்பட்டி கோவை மாவட்டச் செய்திகள் பொன்னாண்டம்பாளையம் கிராமம் Coimbatore district News பாராளுமன்ற தொகுதி
A village under four panchayats panchayats நான்கு ஊராட்சியின் கீழ் ஒரு கிராமம் கருமத்தம்பட்டி கோவை மாவட்டச் செய்திகள் பொன்னாண்டம்பாளையம் கிராமம் Coimbatore district News பாராளுமன்ற தொகுதி

By

Published : Jan 5, 2021, 7:57 AM IST

Updated : Jan 5, 2021, 2:13 PM IST

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பொன்னாண்டம்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்தக் கிராமத்தின் கிழக்குப்பகுதி கணியூர் ஊராட்சியிலும், தெற்குப்பகுதி அரசூர் ஊராட்சியிலும், மேற்குப்பகுதி நாரணாபுரம் ஊராட்சியில், வடக்குப்பகுதி மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் இணைந்துள்ளது.

பொன்னாண்டம்பாளையம் கிராமம் 4 ஊராட்சி அமைப்புகளுக்கு உள்பட்டதாக பிரிக்கப்பட்டுள்ளதால் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையே சுணக்கம் ஏற்படுகிறது.

பொன்னாண்டம்பாளையம் கிராமத்தின் தோற்றம்

பள்ளி சான்றிதழ், இறப்பு சான்றிதழ் என பல்வேறு சான்றிதழ் வாங்குவதற்கு மக்கள் அவதிப்படும் சூழல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கிராமத்தின் வாக்குரிமை கணியூர் ஊராட்சியில் இருந்தாலும், ஆவணங்களில் 4 உள்ளாட்சி அமைப்பின் கீழ் இருப்பதாலும் குடிநீர், வசதி சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியாத நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் இருப்பதாக கணியூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் செல்வராஜ் தெரிவித்தார்.

மேலும் இந்தக் கிராமம் 4 உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் வருவதால் பாஸ்போர்ட், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவை பெறுவதற்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும் இதன் காரணமாக தன்னுடைய வெளிநாட்டு கல்வியும் பாதிக்கப்பட்டதாக குமுறுகிறார் அப்பகுதி இளைஞர் மகேஷ்.

நான்கு ஊராட்சியின் கீழ் ஒரு கிராமம்!

பெண்களைப் பொறுத்தவரை ஆரம்ப சுகாதார நிலையங்கள் செல்வதற்கும் சான்றிதழ்கள் பெறுவதற்கும் 4 உள்ளாட்சி அமைப்புகள் அலைகழித்து வருகின்றன. இந்தப் பிரச்சனை காரணமாக குடிநீர் இணைப்புகள் குடிநீர் வசதிகள் முறையாக கிடைக்கப்பெறவில்லை, குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பதற்கும் பிரச்சனை எழுகிறது. எனவே இதற்கு தீர்வு வேண்டி வரும் 6ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதற்கு அடையாளமாக ஜனவரி 1-ஆம் தேதி வீடுகளில் கறுப்பு கொடி கட்டி எதிர்ப்பையும் தெரிவித்துள்ளதாக கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அரசு நேரடி கொள்முதல்; கரும்பு விவசாயிகள் வரவேற்பு!

Last Updated : Jan 5, 2021, 2:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details