தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொள்ளாச்சி அருகே கையை இழந்து உணவுக்காக தவிக்கும் குரங்கு.. - உணவின்றி தவிக்கும் குரங்கு

பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சியில் தெரு நாய்களிடம் சிக்கி அவதிப்படும் ஒரு கையை இழந்த குரங்கை மீட்டு வனப்பகுதியில் விட பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 18, 2022, 12:10 PM IST

கோவை:பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி பகுதிக்குள் நுழைந்த குரங்கு ஒன்று வலது கை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. அந்த குரங்கை, அவ்வப்போது தெரு நாய்கள் கடித்து காயப்படுத்துகின்றன. மேலும், காக்கைகளும் குரங்கை சுற்றி சுற்றி வந்து கொத்தி காயப்படுத்துகின்றன. இதனால், பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உணவுக்காக குரங்கு அங்குமிங்கும் செல்வதால் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோல், பொள்ளாச்சி பகுதியில் இரண்டு குரங்குகள் ஆறு மாத காலமாக புதிய, பழைய பேருந்து நிலையம், சார் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நடமாடுகின்றன.

ஊருக்குள் நுழைந்த ஒரு கையற்ற குரங்கை மீட்டு வனத்திற்குள் விடக் கோரிக்கை

குரங்கை பிடித்து வனப்பகுதியில் விட பலமுறை கோரிக்கை விடுத்தும், வனத்துறையினர் குரங்கைப் பிடித்து காப்பாற்ற முயற்சி எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: Video:குரங்கு கூட்டங்களுக்கு இடையே சண்டை- வைரலாகும் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details