தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவையில் அதிவேகமாக வந்த கார் மோதி ஒருவர் மரணம் - கோவையில் கார் விபத்து

சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர் மீது வேகமாக வந்த கார் மோதியதில் அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதிவேகமாக வந்த கார்
அதிவேகமாக வந்த கார்

By

Published : Dec 13, 2021, 12:37 PM IST

கோவை: சின்னியம்பாளையம் பகுதியின் சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று சுமார் ஐந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

இதில் அங்கு சாலையோரம் நின்றுகொண்டிருந்த தஞ்சையைச் சேர்ந்த வீரமணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதிவேகமாக வந்து ஒருவரின் உயிரைப் பறித்த கார்
இவர் அப்பகுதியில் உள்ள தனியார் லேத் ஒன்றில் பணிபுரிந்துவந்தவர் என்பதும், சாலையோரம் நின்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நடைபெற்றதும் தெரியவந்தது. தகவலறிந்து வந்த போக்குவரத்து காவல் துறை கார் ஓட்டுநரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details