கோவை:தடாகம் சாலை காளையனூரில் வாட்டர் கம்பெனியில் நேற்று(அக்.06) சிறுத்தை ஒன்று அங்கிருந்த ஆடுகளை தாக்கியதாக கூறப்பட்டது. அதனைத்தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் சிறுத்தை உள்ளதா என கண்டறிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, கூண்டு வைத்து, சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் காளையனூர்- திருவள்ளுவர் நகர்ப்பகுதியில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. இதனை அப்பகுதி மக்கள் அவர்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவில் மலை அடிவாரத்திலேயே சிறுத்தை அமர்ந்து கொண்டிருப்பது பதிவாகியுள்ளது.