கோவை மாவட்டம் காரமடை வனச்சரகம், மானார் பீட் வனப்பணியாளர்கள் பசுங்கனிமேடு வனப்பகுதியில் நேற்று (ஏப்ரல் 9) மாலை வனத்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது அங்கு துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, ஆண் சிறுத்தை இறந்த நிலையில் கிடந்துள்ளது.
வனப்பகுதியில் உயரிழந்த நிலையில் சிறுத்தை - கோவை காரமடை வனச்சரகம்
கோவை: காரமடை வனச்சரகம் பசுங்கனிமேடு, வனப்பகுதியில் ஆண் சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுத்தை
இது குறித்து வன அலுவலர், உதவி வனபாதுகாவலர், கால்நடை மருத்துவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இனறு உடற்கூராய்வு நடத்தப்படுகிறது. சிறுத்தை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மாணவியிடம் திருமண ஆசைவார்த்தைக் கூறி ஏமாற்றிய இளைஞர் கைது!