தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விளையாடிக்கொண்டிருந்த பள்ளி மாணவி திடீரென மயங்கிவிழுந்து உயிரிழப்பு!

கோவை: வடவள்ளி அருகே தனியார் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த 9ஆம் வகுப்பு மாணவி திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடவள்ளி காவல் துறையினர்
வடவள்ளி காவல் துறையினர்

By

Published : Feb 18, 2021, 10:14 AM IST

கோவை வேடப்பட்டி குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த மருதாச்சலம் என்பவர் கால் டாக்சி (சீருந்து) ஓட்டுநர். இவரது மூத்த மகள் பூமா (14) வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவந்தார்.

நேற்று (பிப். 17) வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி பூமா, மதியம் விளையாட்டு நேரத்தில் பள்ளி வளாகத்தில் இருந்த மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது பூமா திடீரென மைதானத்தில் மயங்கிவிழுந்துள்ளார். இதையடுத்து உடன் இருந்த சக மாணவிகள் ஆசிரியர்களுக்குத் தகவல் அளித்தனர். அங்கு வந்த ஆசிரியர்கள் மாணவியை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

ஆனால் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமானதால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

வடவள்ளி காவல் துறையினர்

சம்பவம் தொடர்பாக வடவள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மாணவிக்கு இதய கோளாறு இருந்துள்ளதாகவும், அதற்காக சிகிச்சைப் பெற்றுவந்ததும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவை அறிவிக்கக்கோரிய வழக்கு: மார்ச் 15ஆம் தேதி விசாரணை

ABOUT THE AUTHOR

...view details