கோயம்புத்தூர்: காரமடையை அடுத்த கோடதாசனூர் பகுதியில் யானை தந்தங்கள் மற்றும் மண்டை ஓட்டினை விற்பனை செய்ய பதுக்கி வைத்துள்ளதாக வன குற்றத்தடுப்பு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், அப்பகுதிக்கு விரைந்த காரமடை வனச்சரகர் திவ்யா தலைமையிலான வனத்துறையினர், கோடதாசனூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்களை கண்டறிந்தனர்.
தொடர்ந்து, அங்கிருந்த தந்தங்கள் மற்றும் மண்டை ஓடு உள்ளிட்டவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் காரமடையை அடுத்த கட்டாஞ்சி மலையில் 3 மாதங்களுக்கு முன்னர் இறந்து கிடந்த யானையின் சடலத்தில் இருந்து தந்தங்கள் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள் மேலும், யானை தந்தங்கள் மற்றும் மண்டை ஓட்டினை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக நாகராஜன் (51), பிரபு (27) ஆகிய இருவரையும், இறந்த யானையில் சடலத்தில் இருந்து உடல்பாகங்களை எடுத்ததாக காரமடை ஏழு சுழி பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி (40), ராமமூர்த்தி (39), குமரேசன் (31), அஜீத் (25), ரஞ்சித் (20), ஆறுமுகம் (56) மற்றும் மண்டை ஓட்டினை வாங்க முயன்ற சிறுமுகையைச் சேர்ந்த பாபு (48) ஆகிய 9 பேரை நேற்று (ஜூலை 9) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து யானை தந்தங்கள் மற்றும் மண்டை ஓட்டினை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தந்தத்திற்காக யானைகள் வேட்டை; சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை