தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காட்டுப்பன்றியை வேட்டையாடிய 6 பேர் கைது - Coimbatore Forestry

கோவை மாவட்டத்தில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

காட்டுப்பன்றியை வேட்டையாடிய 6 பேர் கைது
காட்டுப்பன்றியை வேட்டையாடிய 6 பேர் கைது

By

Published : Jun 8, 2021, 5:29 PM IST

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், கோபனாரி பிரிவு, வனத்துறையினர், காவல் துறையினர் ஜூன் 6ஆம் தேதி ரோந்துப்பணி மேற்கொண்டபோது குண்டுக்கல் சராக வனப்பகுதியில் உள்ள ஓடை ஒன்றில் இரண்டு நபர்கள் (ரங்கசாமி, மணிகண்டன்) காட்டுப்பன்றி கறியை ஓடையில் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது பிடிப்பட்டனர்.

தணிக்கை

ஓடையின் மேட்டுப் பகுதியில், கறியை வெட்டிக் கொண்டிருந்த கூட்டாளிகள் நான்கு நபர்கள், கறி மற்றும் வெட்டுக்கத்தியை அங்கேயே போட்டுவிட்டு, தப்பியோடினர்.

அவர்களிடமிருந்து சுமார் 30 கிலோ இறைச்சி கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, பெரிய நாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ், வனவர் மதுசூதனன் மற்றும் குழுவினர், சம்பவ இடத்தை தணிக்கை செய்து, தப்பியோடிய செந்தில்குமார், செல்வம், சக்திவேல், வேலுச்சாமி ஆகிய நான்கு பேரையும் நேற்று (ஜூன் 7) கேரளா பகுதியில் தனித்தனியே பிடித்தனர்.

காட்டுப்பன்றியை வேட்டையாடிய 6 பேர் கைது

ரூபாய். 60,000 அபராதம்

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆறு பேரும் கேரளா மாநில எல்லையோரம் குடியிருப்பவர்கள் என்பதும், அருகிலுள்ள தமிழ்நாடு வனப்பகுதிக்குள் நுழைந்து, இரும்பு கம்பிகளில் சுருக்கு வைத்து, காட்டுப் பன்றியை வேட்டையாடி, வெட்டி கூறு போட்டதும், தங்களது தேவைக்கு போக மீதியை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ஆறு பேர் மீதும் வன உயிரின குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலா ரூ.10,000 வீதம், மொத்தம் ரூ. 60,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details