தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தூய்மைப் பணியாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம்! - தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

பொள்ளாச்சி நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் சாராட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூய்மைப் பணியாளர்கள்  போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

By

Published : Apr 4, 2022, 2:40 PM IST

பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். நகரப்பகுதிகளில் சாக்கடை அடைப்புகளை சரி செய்வது, சேகரமாகும் குப்பைகளை சேகரித்து தரம் - பிரித்து அனுப்பும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கரோனா வைரஸ் தொற்றின் போது மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களில் இவர்களின் சேவை இன்றிமையாதது. தற்போது முகக்கவசம், கையுறை, மற்றும் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை, தினசரி 390 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்ட இவர்களுக்கு 350 ரூபாய் மட்டுமே வழங்கி வந்துள்ளனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

இதனையடுத்து தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக வழங்கப்படும் கூலியில் பிடித்தம் செய்கிறார்கள். வார விடுமுறை நாள்களில் சம்பளம் இல்லாமல் பணிக்கு வர அலுவலர்கள் வற்புறுத்துவதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகரமன்ற உறுப்பினர்கள் இடைவிடாது பணியாற்ற சொல்லி வற்புறுத்துவதாக்கக் கூறி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுச் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இவர்களின் போராட்டத்தால் நகர பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நகராட்சி அலுவலர்கள் போராட்டம் நடத்தியவர்களிடம் எவ்விதமான பேச்சுவார்த்தையில் நடத்த வராததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details