தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவையில் ரூ.30 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்.. - kudka seized at kovai

கோவை: அரசால் தடை செய்யப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான பான் மசாலா, குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கோவையில் குட்கா விற்ற நபர்கள் கைது
கோவையில் குட்கா விற்ற நபர்கள் கைது

By

Published : Dec 1, 2019, 10:24 PM IST

கோவை வெரட்டி ஹால் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் பேரில் துணை ஆணையர் பாலாஜி சரவணன் தலைமையிலான மாநகர தனிப்படை காவல்துறையினரும் வெரட்டி ஹால் காவல் நிலைய உதவி ஆய்வாளரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான பான் மசாலா, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்தபொருட்களை விநியோகம் செய்து வந்த பிரமோத்குமார் (37), வினோத்குமார் (28) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

மாசடைந்து நுரை தள்ளிய பட்டினம்பாக்கம் கடற்கரை! பெருநிறுவன கழிவுகளால் மாசுபாடா?

ABOUT THE AUTHOR

...view details