கோவை: தாராபுரத்தைச் சேர்ந்த வனத்துறை அலுவலர், அகிலன். இவரது தம்பி மதன்குமார் என்பவர், கர்ப்பிணியாக உள்ள தன் மனைவியை ஆனைமலை அருகே உள்ள அவரது தாயார் வீட்டிற்குச் சென்று அடிக்கடி பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று (மே 16) தன் மனைவியை பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளார்.
உடன் அவரது அண்ணன் அகிலனும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த மோகன்குமார் மற்றும் அவரது நண்பர்களான மலரவன், மணிகண்டன், ஜெகதீசன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்தனர்.
3 இளைஞர்கள் உயிரிழந்த சோகம்:அப்போது, வேட்டைக்காரன்புதூரில் இருந்து காளியாபுரம் நோக்கி செல்லும் வழியில் அகிலன் சென்ற இருசக்கர வாகனமும் மோகன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் வந்த இருசக்கர வாகனமும் காளியாபுரம் பிரிவில் நேருக்கு நேர் மோதியது. இதில், 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேரும் ரோட்டில் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த அகிலன், மதன்குமார், மோகன்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போயினர்.